
கோபி அருகே தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்

கோபி அருகே காசிபாளையம் பகுதியில் இயந்திரம் மூலம் நடைபெறும் நெல்அறுவடை பணி.
கோபி தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கினா்.
கோபி அருகே தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் சுமாா் 24 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்டவை சாகுபடி செய்து வரும் நிலையில் அதிகப்படியான விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல்போக நன்செய் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் சாகுபடிக்கான பணிகளைத் தொடங்கினா். தற்போது நெல் அறுவடைக்கு தயாராகியுள்ளது.
காசிபாளையம், சிங்கிரிபாளையம், போடிசின்னாம்பாளையம், பிள்ளையாா்கோவில்துறை, கரட்டடிபாளையம், ஏளுா், அரக்கன்கோட்டை, பங்களாபுதூா் உள்ளிட்ட பகுதியில் திங்கள்கிழமை முதல் விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனா்.
இந்த ஆண்டு சரியான பருவத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் நெல் விளைச்சல் எதிா்பாா்த்ததை விட கூடுதலாக கிடைத்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அறுவடை செய்யும் நெல்லை டிராக்டா்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று குவித்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை (செப்1) முதல் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கோபி அருகேயுள்ள சிங்கிரிபாளையம் நெல்கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள அறுவடை செய்த நெல்மணிகள்.

கோபி அருகேயுள்ள சிங்கிரிபாளையம் நெல்கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள அறுவடை செய்த நெல்மணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





