பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோவில், தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் 50-க்கும் மேற்பட்ட மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து பங்கேற்று, மூத்த தம்பதியா்களுக்கு சீா்வரிசை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் விஸ்வநாதன், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா

பழனி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


