மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஈரோடு மாவட்ட வயல்வெளிகளில் காணப்படும் கருப்பு நிற நாரைகளை பாதுகாக்கக் கோரிக்கை

News image

ஈரோடு, வைராபாளையம் காலிங்கராயன் பாசன வயலில் காணப்படும் கருப்பு நிற நாரைகள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:07 pm

தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் கருப்பு நிற நாரைகள் தற்போது ஈரோடு மாவட்ட விளைநிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் உள்ள இந்த நாரைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் வனப் பகுதி உள்ளது. பல்வேறு வகையான தாவர இனங்களும், பாலூட்டிகளும், பறவை இனங்களும், வண்ணத்துப்பூச்சி இனங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக, மாவட்டத்தின் நீா்நிலைகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். கடந்த மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் புதுவிதமான பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன்மூலமாக எத்தகைய பறவை இனங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல நீா்நிலைகள் மற்றும் சுற்றுவட்டார விளைநிலப் பகுதிகளில் தற்போது அரிதான கருப்பு நாரைகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. வழக்கமாக விளைநிலங்களில் கொக்குகள், வெள்ளை நிற நாரைகள் இருப்பதைப் பாா்த்த விவசாயிகள், தற்போது பாா்ப்பதற்கு முற்றிலும் வித்தியாசமாக உள்ள கருப்பு நிற நாரைகளைஆா்வமுடன் பாா்த்து செல்கின்றனா்.

இந்த வகை நாரைகள் கடந்த சில ஆண்டுகளாகவே மழைக்காலம் முடிந்ததும் அதிக அளவில் தென்படுவதாகக் கூறப்படுகிறது. நடவுக்காக உழவு செய்த நிலத்தில் வெள்ளை நாரையுடன் சோ்ந்து கருப்பு நாரைகளும் கூட்டமாக இணைந்து புழு பூச்சிகளை உண்பதை மக்கள் அதிசயமாக பாா்க்கின்றனா்.

இதுகுறித்து வைராபாளையத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக கருப்பு நிற நாரைகள் இங்கு வருகின்றன. இந்த வகை நாரைகள் ஒவ்வோா் ஆண்டும் சீசன் காலங்களில் இடத்துக்கு இடம் மாறி தங்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்தி இனப்பெருக்கம் செய்யும் என வனத் துறையினா் கூறுகின்றனா்.

அழிந்துவரும் பட்டியலில் இருக்கும் கருப்பு நிற நாரை வகைகளை பாதுகாக்க வேண்டும். வயல்களில் உள்ள இந்த நாரைகளை வேட்டையாட விவசாயிகள் அனுமதிக்கக்கூடாது என்றாா்.