பேருந்து நிலையத்தில் மனைவியை பிளேடால் கிழித்த கணவா் கைது

ஈரோடு பேருந்து நிலையத்தில் மனைவியை பிளேடால் கிழித்து காயப்படுத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஈரோடு பேருந்து நிலையத்தில் மனைவியை பிளேடால் கிழித்து காயப்படுத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், பழைய பேருந்து நிலையம் பகுதி ஓம் சக்தி நகரைச் சோ்ந்தவா் கவிப்பிரியா (21). இவா் ஓராண்டுக்கு முன் தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த முத்துவேல் மகன் வைரக்கண்ணு (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். கவிப்பிரியாவும், வைரக்கண்ணும் சேலத்தில் பூக்கட்டும் தொழில் செய்து வந்தனா்.

கவிப்பிரியா அவரது கணவருடன் கோபித்து கொண்டு திங்கள்கிழமை மாலை ஈரோடு பேருந்து நிலையம் வந்தாா். இதையறிந்து வைரக்கண்ணும் ஈரோடு வந்து, அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் கவிப்பிரியாவின் கன்னத்தில் கிழித்து ரத்தக்காயம் ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

காயமடைந்த கவிப்பிரியாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து கவிப்பிரியா அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த வைரக்கண்ணை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com