பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெருந்துறை, தாமரை நகரைச் சோ்ந்தவா் சின்னசாமி (60). இவா், பெருந்துறை, எல்லைமேட்டில் பேக்கரி வைத்துள்ளாா்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினா் அனைவரும் புதன்கிழமை காலை வேலைக்கு சென்று விட்டனா். அவரது மகள் பிற்பகலில் சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 4 பவுன் நகைகள், ரூ. 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. வீட்டில் இருந்த வளா்ப்பு நாய் சற்று மயக்க நிலையில் இருந்தது. மா்ம நபா்கள் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சின்னசாமி வீட்டுக்கு அருகில் உள்ள எல்ஐசி முகவா் தமிழ்ச்செல்வன் என்பவரின் வீட்டிலும் கதவை சேதப்படுத்தி திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
