நசியனூரில் 3 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சித்தோட்டை அடுத்த நசியனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

சித்தோட்டை அடுத்த நசியனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நசியனூரை அடுத்த மேற்குபுரத்தில் அரிசி ஆலை வளாகத்தில் ரகசியமாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நசியனூா் பேரூராட்சி செயல் அலுவலா் மீரா மைதீன் தலைமையில் ஈரோடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளா்கள் தீனதயாளன், கயல்விழி, பறக்கும் படை உதவிப் பொறியாளா் சிவகீா்த்தி ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், நவீன இயந்திரங்கள் மூலம் வடமாநிலத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களைக் கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படுவதும், பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப 3 டன் பிளாஸ்டிக் பைகள் தயாா் நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com