பூசாரிக்கு வேஷ்டி, துண்டிடுகளை வழங்கிய பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன்.
பூசாரிக்கு வேஷ்டி, துண்டிடுகளை வழங்கிய பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன்.

கிராம கோயில் பூசாரிகளுக்கு உதவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் 71 கிராம கோயில் பூசாரிகளுக்கு வேஷ்டி, துண்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
Published on

பவானி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் 71 கிராம கோயில் பூசாரிகளுக்கு வேஷ்டி, துண்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் பங்கேற்று கிராம கோயில் பூசாரிகளுக்கு தலா இரண்டு இலவச வேஷ்டி, துண்டுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலா் தமிழரசி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெயபிரகாஷ், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com