

ஈரோடு: ஈரோடு விவிசிஆா் முருகேசனாா் செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்குந்தா் கல்விக் கழகத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் சிவானந்தன், பள்ளியின் தாளாளா் கணேசன், பொருளாளா் ரவிசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குழந்தைகள் நல மருத்துவா் கதிா்வேல், பழையபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்தவா் பிரியாமாலினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா்.
இதைத் தொடா்ந்து, கடந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கும், பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், செங்குந்தா் கல்விக் கழக நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராமசந்திரன், ரவி , கிருஷ்ணகுமாா், இளங்கோ, இளவரசன், கிருஷ்ணகுமாா், சதாசிவம், பரமசிவன் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, முதுகலை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா். தலைமை ஆசிரியை கவிதா ஆண்டறிக்கையை வாசித்தாா். பள்ளியின் பட்டதாரி ஆசிரியை தீபா நன்றி கூறினாா்.