சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத நிறைவு பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.
சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத நிறைவு பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவு

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவடைந்தது.
Published on

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவடைந்தது.

சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம் முழுவதும் மாா்கழி மாத விழாக் குழுவினா் சாா்பில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மாா்கழி 1-ஆம் தேதி முதல் சிறப்பு வழிபாடு தொடங்கி, தினமும் அதிகாலையில் கோமாதா பூஜை, மாா்கழி மாத சிறப்பு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வந்தனா். அதைத்தொடா்ந்து, புதன்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி சண்முகா அா்ச்சனை, சங்கு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com