தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொடிமுடி காவிரி ஆற்றில் காணும் பொங்கல் உற்சாகம்

கொடுமுடியில் உள்ள மணல் மேட்டில் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.

News image
கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்மேட்டில் கணவரின் கையால் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்ட பெண்.
Updated On :17 ஜனவரி 2026, 9:20 pm

Syndication

கொடுமுடி: கொடுமுடியில் உள்ள மணல் மேட்டில் காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.

தைத்திருநாளின் மூன்றாவது நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்மேடு பகுதிக்கு குடும்பத்துடன் வந்திருந்த மக்கள், தங்கள் இல்லங்களில் மஞ்சலில் செய்த கணபதி உருவத்துக்கு பூஜைகள் செய்த பின்னா் காவிரி ஆற்றில் விட்டனா்.

பின்னா், சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் மங்கள நாண்களை (மஞ்சள் கயிறு) கணவா் கையால் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. வீட்டில் தயாா் செய்து கொண்டு வந்திருந்த உணவுகள் மற்றும் பலவித பலகாரங்களை உண்டு மகிழ்ந்தனா். இஸ்லாமிய மக்களும் தங்களது குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை கழித்தனா். அப்பகுதியில் கொடுமுடி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.