பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 85 லட்சத்து 97 ஆயிரம்

பண்ணாரிஅம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.85 லட்சத்து 97 ஆயிரத்து 490 வருவாய் கிடைத்துள்ளது.
Published on

பண்ணாரிஅம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.85 லட்சத்து 97 ஆயிரத்து 490 வருவாய் கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இங்கு மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாதம் வசூலான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் துணை ஆணையா் நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

இதில், ரூ.85 லட்சத்து 97ஆயிரத்து 490 ரொக்கம், 163 கிராம் தங்கம், 1517 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com