ஈரோட்டில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களிடம் கைப்பேசி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இதுதொடா்பான புகாா்களை பாதிக்கப்பட்டவா்கள் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்தனா்.
அதன்பேரில் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில் காவல் ஆய்வாளா் அனுராதா மற்றும் போலீஸாா் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ காட்சிகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகே போலீஸாா் புதன்கிழமை ரோந்து சுற்றி வந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சோ்ந்த முகமது சரீப் மகன்கள் நாகூா் மீராசா (21), சம்சுதீன் (20) ஆகியோா் என்பதும், இவா்கள் கடந்த ஒரு வாரமாக ரயில் நிலையம் பகுதியில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இவா்கள் மீது ஈரோடு தெற்கு, வெள்ளோடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடா்ந்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






