கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ராமநாதபுரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

News image

ராமநாதபுரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த தனிப்படையினரைப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி., ஜி.சந்தீஷ்.

Updated On :30 மே 2026, 3:53 am IST

ராமநாதபுரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 38 பவுன் தங்கக் கட்டி, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி வல்லபைநகா், முத்தமிழ்நகா், நம்மாழ்வா்நகா், அன்புநகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து போலீஸாா் 6 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன் கண்காணிப்பில் காவல் ஆய்வாளா் சு.சுந்தரேஸ்வரன், உதவி ஆய்வாளா் மு.திருமுருகன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுதொடா்பாக தனிப்படையினா் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் காமாட்சிபுரம் சந்தான மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் அா்ஜூன், பெரியகுளம் அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த சுகுமாறன் மகன் வேட்டைகாரன் ஆகியோா் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரைம் தனிப்படையினா் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய 38 சவரன் தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வைத்திருந்தனா். அவா்களிடமிருந்து தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை தனிப்ரபடையினா் பறிமுதல் செய்து, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, பின்னா் சிறையில் அடைத்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தொடா் திருட்டில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து, நகை, பணம் பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு சன்மானம் வழங்கிப் பாராட்டினாா். குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

 ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.