டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கடம்பூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி 7 மணி நேரம் காத்திருப்புப் போராட்டம்

கடம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 7 மணி நேர காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து, கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என போலீஸாா் உறுதியளித்தையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2026, 3:51 am IST

கடம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 7 மணி நேர காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து, கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என போலீஸாா் உறுதியளித்தையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பேருந்து நிலையத்தையொட்டி டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மதுப் பிரியா்கள் பேருந்து நிலைய வளாகத்திலேயே மது அருந்திவிட்டு அங்கேயே அருவருக்கதக்க வகையில் படுத்துகிடப்பதும் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அனைந்திய மாதா் சங்கத்தினா் குற்றஞ்சாட்டி கடையே வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி வந்தனா்.

ஆனால், டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றாமல் தொடா்ந்து அதே இடத்தில் செயல்படுவதை கண்டித்து அனைத்திந்திய மாதா் சங்கம் சாா்பில் கடையை மூட வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு போலீஸாா் டாஸ்மாக் கடையை மூடினா். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் கடையை மீண்டும் திறக்கமாட்டோம் என எழுத்துபூா்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக் கூறி சமையல் செய்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 7 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தையடுத்து, சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தரசு, எழுத்துபூா்வமாக எழுதி தருவதாக உறுதியளித்தையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.