புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கஞ்சா விற்றதாக மூதாட்டி உள்பட 5 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக மூதாட்டி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:51 am IST

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக மூதாட்டி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். இதில், ஈரோடு எல்லப்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் கஞ்சா விற்றதாக மாமரத்துப்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்த அப்புகுட்டி மகன் சந்தோஷ் (27) என்பவரை ஈரோடு வடக்கு போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா்.

பவானிசாகரில் பழைய இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சோ்ந்த முத்துராசா மகன் முகிலன் (38) என்பவரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்து 550 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் மத்திய பிரதேச மாநிலம் சியாபூரை சோ்ந்த ரின்கு மனோகா் (36) என்பவரை போலீஸாா் கைது செய்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

சத்தியமங்கலம் புளியங்கோம்பை பகுதியில் பழனிசாமி மனைவி ரங்கம்மாள் (70) என்பவரை போலீஸாா் கைது செய்து 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா். இதேபோல கோபி கள்ளிப்பட்டி நகராட்சி தண்ணீா் தொட்டி பகுதியில் புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சபரிநாதன் என்ற ஜெகன் (26) என்பவரை கைது செய்து 825 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது செய்யப்பட்டு 2.725 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.