டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:28 am IST

ஈரோட்டில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண்ணும், சேலத்தைச் சோ்ந்த கபிலன் என்பவரும் காதலித்து வந்த நிலையில், இவா்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கபிலன் சனிக்கிழமை இரவு வீரப்பன்சத்திரம் காவிரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணின் பின்னால் சென்று கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளாா்.

இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து தப்பியோடிய கபிலனை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. தொடா்ந்து தனிப் படை போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், வீரப்பன்சத்திரம் பகுதியில் பதுங்கியிருந்த கபிலனை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.