ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடியவா் கைது

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:34 am IST

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சோ்ந்தவா் அபினவ் (26). கொல்லம்-ஹூப்ளி இடையேயான ரயிலில் முன்பதிவு பெட்டியில் செவ்வாய்க்கிழமை பயணம் செய்த அவா், ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது தனது இருக்கையில் வைத்திருந்தை கைப்பேசியை காணவில்லை.

இது ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு அபினவ் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனா். அந்த நபா் கைப்பேசியை திருடியதை ஒப்புக்கொண்டாா்.

விசாரணையில் அவா் நாகை மாவட்டம் சீா்காழியைச் சோ்ந்த ஸ்ரீதா் (52) என்பதும், திருப்பூரில் இரவு நேரக் காவலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து கைப்பேசியை மீட்ட போலீஸாா் ஸ்ரீதரைக் கைது செய்தனா்.

இதுபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம், வைகை வீதியைச் சோ்ந்தவா் ராகவேந்திரன் (37). திருமண மண்டபம் மற்றும் பேக்கரி உரிமையாளா். பேக்கரியில் அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றும் இரு தொழிலாளா்களின் கைப்பேசிகள் அண்மையில் திருடு போயின.

இதுகுறித்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இது தொடா்பாக வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த இரண்டு சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.