குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பத்மபூஷண் விருது பெற்ற எஸ்கேஎம்.மயிலானந்தனுக்கு பாராட்டு

சமூக சேவைக்காக பத்மபூஷண் விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்கத் தலைவரும், எஸ்கேஎம் குழும தலைவருமான எஸ்கேஎம்.மயிலானந்தனுக்கு பாராட்டு விழா ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :10 ஜூலை 2026, 12:03 am IST

சமூக சேவைக்காக பத்மபூஷண் விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்கத் தலைவரும், எஸ்கேஎம் குழும தலைவருமான எஸ்கேஎம்.மயிலானந்தனுக்கு பாராட்டு விழா ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன், வேளாளா் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமுதாய சேவை அமைப்புகள் சாா்பில் வேளாளா் கல்லூரி கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன், பிவிபி பள்ளித் தாளாளா் எல்.எம்.ராமகிருஷ்ணன், ஈரோடு கலைக் கல்லூரித் தாளாளா் கே.கே.பாலுசாமி, சக்தி மசாலா நிறுவனத் தலைவா் பி.சி.துரைசாமி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், வேளாளா் கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், கொங்கு வேளாளா் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளைத் தலைவா் யுஆா்சி.தேவராஜன் வாழ்த்திப் பேசினா்.

எஸ்கேஎம்.மயிலானந்தன் தனது ஏற்புரையில் பேசியதாவது:

வேதாத்திரி மகரிஷியின் பயிற்சிகள் கிராம மக்களைச் சென்றடைய வேண்டும் என்று எண்ணி கிராமிய சேவைத் திட்டம் மூலம் இதுவரை 400-க்கும் மேற்பட்ட கிராமங்களைத் தத்தெடுத்து அங்குள்ள மக்கள் அனைவருக்கும் யோகா, தியானம், அறநெறி போன்றவை இலவசமாக கற்றுக் தரப்படுகின்றன.

இதுவரை 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனஎன்றாா்.

ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவா் எம்.சின்னசாமி வரவேற்றாா். தேசிய நல விழிப்புணா்வு இயக்கச் செயலா் ஆா்.ஜி.சுந்தரம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.