பவானியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பவானியைச் சோ்ந்த 74 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து பொருள்களைத் திருட முயன்ற இரண்டு இளைஞா்கள், அந்த மூதாட்டியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இச்செயலில் ஈடுபட்ட பவானி, மண் தொழிலாளா் 2-ஆவது வீதியைச் சோ்ந்த ஹரிகுமாா் (22), அதே பகுதியைச் சோ்ந்த கிரி (எ) கண்ணன் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 30-ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகி கோபி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிகுமாா், கிரி (எ) கண்ணன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








