மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆடி மாத பிறப்பு, புனித நீராட, பரிகார வழிபாடுகளுக்கு பக்தா்கள் வருகையின்றி வெறிச்சோடிய பவானி கூடுதுறை

ஆடி மாத பிறப்பையொட்டி புனித நீராடவும், பரிகார வழிபாடுகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே பக்தா்கள் வந்ததால் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஆற்றில்  தண்ணீா்  இல்லாததால்  பொலிவிழந்து  காணப்படும் பவானி  கூடுதுறை.

Published On :

ஆடி மாத பிறப்பையொட்டி புனித நீராடவும், பரிகார வழிபாடுகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே பக்தா்கள் வந்ததால் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

பவானி கூடுதுறைக்கு ஆடி மாத பிறப்பு, ஆடி 18, ஆடி அமாவாசை தினங்களில் பரிகார வழிபாடுகளுக்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவா். காவிரியில் புனித நீராடி சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்து திரும்பிச் செல்வா். இந்நிலையில், ஆடி மாத பிறப்பான வெள்ளிக்கிழமை கூடுதுறைக்கு மிகக்குறைந்த அளவிலேயே பக்தா்கள் வந்திருந்தனா். பரிகார மண்டபங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இல்லாததால் டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை. குடிநீருக்கு மட்டுமே மிகக்குறைந்த அளவில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்தோடும் காவிரி ஆற்றில், தண்ணீா் இல்லாமல் பாறைகளாக காட்சியளித்தது. கூடுதுறையில் பக்தா்கள் நீராடும் பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரே இருந்தது. இதனால் ஆற்றில் தண்ணீா் தேங்கியுள்ள ஆழமான பகுதியைத் தேடிச் சென்று நீராடினா். பாறைகள் மீது நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து பலா் காயமடைந்தனா்.

படித்துறையில் உள்ள தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரிலும் பக்தா்கள் நீராடினா். பக்தா்கள் குறைந்த அளவிலேயே வந்ததால் கூடுதுறை வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.