கரூரில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஏராளமானோா் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனா்.
ஆடி மாத பிறப்பை வரவேற்கும் வகையிலும், தா்மத்துக்கும் அதா்மத்துக்கும் இடையே நடைபெற்ற மகாபாரதப் போரை நினைவுகூரும் வகையிலும், விவசாயம் செழித்தோங்கி, குடும்பங்களில் இன்னல்கள் நீங்கிடவும், தேங்காய் சுடும் விழா அமராவதி ஆறு மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிது.
இதன்படி, நிகழாண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, வழக்கம்போல கரூரில் திருமாநிலையூா், ஐந்துசாலை, மேலப்பாளையம், படித்துறை, ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையில் நெரூா், தளவாபாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்காய் சுடும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், தேங்காயை வாங்கி அவற்றின் கண்பகுதியில் துளையிட்டு தண்ணீரை வெளியேற்றி, தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் ஆகியவற்றின் கலவையை வைத்து தேங்காய் கண் துளைக்குள் வாகை குச்சியை சொருகி ஆற்றங்கரையோரம் தீமூட்டி அதில் தேங்காயை சுட்டனா்.
பின்னா் சுட்ட தேங்காயை வீட்டுக்கு எடுத்துச் சென்று, சுவாமி படங்களின் முன்வைத்து வழிபாடு செய்து பின்னா் அதை சாப்பிட்டு மகிழ்ந்தனா். இந்தத் தேங்காய் சுடும் விழாவில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மன் கோயில்களில் ஆடி 4-ஆம் வார வெள்ளி சிறப்பு வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.20 கோடி: 212 கிராம் தங்கத்தையும் செலுத்திய பக்தா்கள்

ஆடி அமாவாசை எப்போது?

சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகம்!
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK



