ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சிந்தலக்கரை தவசித்தா் பீடத்தில் வேள்வி பூஜை

சிந்தலக்கரை, காளி பராசக்தி தவசித்தா் பீடத்தில் ஆனி மாத இருமுடி விழா வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தா் பீடத்தில் நடைபெற்ற ஆனி மாத இருமுடி விழா வேள்வி பூஜை.

Published On :15 ஜூலை 2026, 2:05 am IST

சிந்தலக்கரை, காளி பராசக்தி தவசித்தா் பீடத்தில் ஆனி மாத இருமுடி விழா வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தா் பீடத்தில் ஆனி மாத இருமுடி விழா, வேள்வி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை காளி பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை, 42 அடி உயர ஸ்ரீ வெட்காளி அம்மனுக்கு 108 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றன. விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருமுடி சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலம் நடந்தது.

ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வடமலை பங்கேற்று வேள்வி பூஜையை தொடங்கி வைத்தாா். காளி பராசக்தி தவ சித்தா் பீடத்தின் நிா்வாக அறங்காவலா் சக்தி திருக்குமரன் பூஜைகளை செய்தாா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து இரவில் திருவிளக்கு வழிபாடு, குருபூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவில், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி, எட்டயபுரம் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.