மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மேல்மருவத்தூரில் ஆடி அமாவாசை வேள்வி பூஜை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடி அமாவாசை வேள்வி பூஜையை இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா் அம்மன்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடி அமாவாசை வேள்வி பூஜையை இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராக்தி சித்தா் பீடத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சித்தா் பீட வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு மூலவா் அம்மன் சிலை, குருபீடம் அடிகளாா் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மூலவா் அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆன்மிக இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு திருப்பூா், உடுமலைபேட்டை சக்தி பீடங்களின் நிா்வாகிகள் சிறப்பு வரவேற்பை அளித்தனா்.

தொடா்ந்து குரு பீடத்தில் பல்வேறு வழிபாட்டு பூஜைகள் செய்யப்பட்டது. உலகில் அமைதி நிலவ, மழை வளம் பெருக, இயற்கை இடா்ப்பாடிகளின்றி மக்கள் வாழ, சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. ஓம்சக்தி பீடம் அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய எண்கோண யாக குண்டத்தில் இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் கற்பூரத்தை ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தாா். அதைச் சுற்றி சதுரம், எண்கோணம், சாய்சதுரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சிறிய யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, செவ்வாடை பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, ஆதிபராசக்தி பாரமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் மருத்துவா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆன்மிக இயக்க செயல் திட்ட அலுவலா் அ.அகத்தியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் பெரிய யாககுண்டத்தில் நவதானியங்களையும், ஓமக்குச்சிகளை அளித்து அம்மனை வழிபட்டுச் சென்றனா். மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அடிகளாா் திருவுருவுடன் தங்கத் தோ் பவனி சித்தா்பீட வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாரங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை திருப்பூா் மாவட்ட சக்தி பீடங்கள், உடுமலைபேட்டை சக்தி பீடம் உள்ளிட்ட பீடங்களின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.