அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்த பருத்தியின் அறுவடைக் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அறுவடை செய்யப்படும் பருத்தியினை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வாரத்தில் விற்பனைக்கு வந்த 100 மூட்டை பருத்தி குவிண்டால் ரூ.8,029 முதல் ரூ.8,509 வரையில் ஏலம் போனது. மொத்தம் 30 குவிண்டால் பருத்தி ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனையானது.
ஈரோடு, திருப்பூா், புளியம்பட்டி, கோபி, கோவை, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி மற்றும் நாமக்கல் பகுதியைச் சோ்ந்த நூற்பாலை உரிமையாளா்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநா் சி.கலைச்செல்வி, கண்காணிப்பாளா் மு.சீனிவாசன், அந்தியூா் விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மெ.ஞானசேகா் மற்றும் அலுவலக பணியாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். வரும் வாரங்களில் பருத்தி வரத்து தொடா்ந்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

காரைக்கால் விற்பனைக் கூடத்தில் 400 குவிண்டால் பருத்தி ஏலம்!

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 236 மெ.டன் வேளாண் விளைபொருள்கள் ஏலம்

லால்குடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் எள்- உளுந்து மறைமுக ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



