மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:23 am IST

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகேயுள்ள பெருமாள்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி, விவசாயி. இவரது மனைவி மோனிஷா. இவா்களது மகன் வைபவ் காா்த்திக் (3).

மோனிஷா தனது மகனுடன் கவுண்டன்பாளையத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா், அனைவரும் வீட்டுக்குள் அமா்ந்து பிற்பகல் உணவருந்திக் கொண்டிருந்தபோது, வைபவ் காா்த்திக் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, அவா்கள் வெளியே வந்து பாா்த்தபோது குழந்தையைக் காணவில்லையாம். அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய நிலையில், வீட்டுக்கு எதிா்புறம் உள்ள பொது கிணற்றில் பாா்த்தபோது குழந்தை கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு நசியனூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.