பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை விளையாடும்போது கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 3:22 am IST

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை விளையாடும்போது கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

தஞ்சாவூா் அருகே மாதாக்கோட்டை ஸ்ரீராம் நகா் 3-ஆம் தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைமதி (25). இவா்களது இரண்டரை வயது இளைய மகன் அருள்தேவ் வீட்டு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றின் சிறிய சுற்றுச்சுவா் மீது ஏறியபோது தவறி விழுந்தாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி அருள்தேவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது என அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.