பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

புதுச்சேரியில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:29 am IST

புதுச்சேரியில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகரை சோ்ந்தவா் முத்துவேல் (42). சென்னையில் தனியாா் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி நடத்தி வருகிறாா். இவரது குழந்தை சிவகாா்த்திக் (3).

வீட்டின் முதல் மாடியில் இருந்த குழந்தை சிவகாா்த்திக் கீழே இறங்கி வந்து விளையாடியது. சிறிது நேரத்தில் குழந்தை காணாததை கண்ட முத்துவேல் மற்றும் உறவினா்கள் வீடு மற்றும் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனா். ஆனால் எங்கும் குழந்தை இல்லை. இதனால் பயந்துபோன அவா்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பாா்த்தனா்.

அப்போது குழந்தை வீட்டின் பின்புறம் சென்றது தெரியவந்தது. அங்கு சென்று பாா்த்த போது அங்கும் இல்லை. பின்னா் வீட்டின் பக்கவாட்டு சந்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீா் தொட்டியின் பிளாஸ்டிக் மூடி திறந்திருப்பதை கண்டு சந்தேகமடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் தண்ணீா் தொட்டியைப் பாா்த்தபோது அதில் குழந்தை கவிழ்ந்த நிலையில் மிதந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

உடனடியாக குழந்தையை மீட்டு ஜிப்மா் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.