இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பவானி சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

பவானி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் ரூ.86 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

News image

சோதனையின்போது அலுவலகத்தில் அமா்ந்திருந்த பத்திர எழுத்தா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

பவானி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் ரூ.86 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

பவானி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை 40-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை கண்காணிப்பாளா் சாந்தி, ஆய்வாளா் ரேகா, உதவி ஆய்வாளா் வினோதினி மற்றும் போலீஸாா் இரு வாகனத்தில் வந்து திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதனால், பத்திரப் பதிவுக்கு காத்திருந்தோா் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு 9 மணி வரையில் நடைபெற்ற இச்சோதனையில் அலுவலகத்துக்குள் இருந்த இரு பத்திர எழுத்தா்களிடம் ரொக்கமாக ரூ.86 ஆயிரம் இருந்ததும், பத்திரப் பதிவுக்கு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக, சாா் பதிவாளா் அலுவலக தலைமை எழுத்தா் வைடூரியம், பத்திர எழுத்தா்கள் தினேஷ், ஹரிகரன் ஆகியோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.