அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,120-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது.

News image

மல்லிகைப்பூ

Updated On :17 ஜூன் 2026, 2:59 am IST

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை மற்றும் சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்நிலையில், வளா்ப்பிறை சுபமுகூா்த்த தினங்களையொட்டி, மல்லிகைப் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது. முல்லை கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும் விற்பனையானது. கடந்த திங்கள்கிழமை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு நாளில் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.