இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடக்கம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :17 ஜூன் 2026, 2:52 am IST

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் வளாகத்தில் தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு ஏ.ஜெயக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனாா்.

இந்நிலையில், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவா், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து, பெருந்துறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 584 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபாா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் சரி பாா்க்கும் பணி தொடங்கியது. இதற்காக பெங்களூா் பெல் நிறுவனத்தில் இருந்து வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.