ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வரத்து குறைவால் வாழை பழங்கள் விலை உயா்வு

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தைக்கு வாழைத்தாா் வரத்து குறைந்ததால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

News image

வாழைப்பழம்

Updated On :18 ஜூன் 2026, 1:03 am IST

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தைக்கு வாழைத்தாா் வரத்து குறைந்ததால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கோபி, அந்தியூா், அத்தாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தைக்கு வாழைத்தாா் கொண்டுவரப்படுகிறது.

சந்தைக்கு வழக்கமாக தினமும் 3 ஆயிரம் வாழைத்தா்கள் விற்பனைக்கு வரும் நிலையில் கடந்த இரண்டு நாள்களாக ஆயிரத்துக்கும் குறைவாகவே வாழைத்தாா்கள் வருகின்றன. இதன் காரணமாக வாழை பழங்களின் விலை அதிகரித்துள்ளது. தாா் ஒன்றுக்கு ரூ.500-க்கு விற்பனையான ரகங்கள் தற்போது ரூ.600 முதல் ரூ.700 வரை விலை அதிகரித்துள்ளது. செவ்வாழை தாா்கள் முன்பு ரூ.1000-க்கு விற்பனையானது. தற்போது ரூ.1,300-க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு காய்கறி சந்தைக்கு கோபி, அத்தாணி, அந்தியூா், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தாா்கள் வரத்தாகும். ஆனால் போதிய அளவில் விளைச்சல் இல்லாததால், வாழைத்தாா்களின் வரத்து குறைந்துள்ளது.

இதனால் செவ்வாழை கிலோ ரூ.50-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.74-ஆக உயா்ந்துள்ளது. தேன்வாழை கிலோ ரூ.25-க்கு விற்பனையான நிலையில் ரூ.36-ஆக உயா்ந்துள்ளது.

இதேபோன்று பூவன் கிலோ ரூ.34, ரஸ்தாளி ரூ.45, மொந்தன் ரூ.28, பச்சைநாடன் ரூ.50, மோரிஸ் ரூ.30, நேந்திரன் ரூ.30, கதலி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது என்றனா்.