27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அந்தியூரில் வருவாய்த் தீா்வாயம்: 160 மனுக்கள் பெறப்பட்டன

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 160 மனுக்கள் பெறப்பட்டன.

News image

பயனாளிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா்.

Updated On :19 ஜூன் 2026, 3:53 am IST

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 160 மனுக்கள் பெறப்பட்டன.

இத்தீா்வாயத்துக்கு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். அந்தியூா் - அ, ஆ, கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், பச்சாம்பாளையம், பூதப்பாடி, ஒட்டபாளையம், பூனாச்சி, முகாசிப்புதுாா், அட்டவணைப்புதுாா், பட்லூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 160 மனுக்களை அளித்தனா்.

இதில், உடனடி தீா்வாக அந்தியூரைச் சோ்ந்த மனுதாரா் மைதிலிக்கு விதவை சான்று வழங்கப்பட்டது. அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், வருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.