ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தாளவாடியில் வருவாய்த் தீா்வாயம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

News image

தாளவாடியில்  புதன்கிழமை நடைபெற்ற  வருவாய்த்  தீா்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து  மனுக்களை  பெறும்  மாவட்ட  ஆட்சியா்  ச.கந்தசாமி.

Updated On :18 ஜூன் 2026, 12:35 am IST

தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளித்த 210 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். முகாமில் அருள்வாடி, மல்லன்குழி, பையண்ணபுரம், கொங்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, கரளவாடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 210 போ் வீட்டுமனை பட்டா, சமுதாயக் கூடம், கணினியில் சிட்டா ஏற்றுதல், குடும்ப அட்டை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

முகாமில் தாளவாடியைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு தாய்மொழி கன்னடம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் விவசாய அட்டை பதிவு செய்யும் முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.