பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சத்தியமங்கலத்தை  அடுத்த  ராஜன் நகரில்  வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட   விவசாயிகள்.

Updated On :19 ஜூன் 2026, 3:54 am IST

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ராஜன் நகா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்வா கொடுத்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் நடராஜ் தலைமை வகித்தாா். தமிழக விவசாய சங்கத்தின் வட்டார பொறுப்பாளா்கள் வேலுமணி, ஜோதி அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிபடி, 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் விதமாக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.