நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் திமுகவின் கருத்தை அரசு ஏற்கக்கூடாது! தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா்

News image

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :21 ஜூன் 2026, 1:16 am IST

மேக்கேதாட்டு அணை பிரச்னைகளுக்கு நடுவா் மன்றம் அமைக்கலாம் என்ற திமுகவின் கருத்தை தமிழக அரசு ஏற்கக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் மாசிலாமணி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சி செய்யும் கா்நாடக அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தீா்மானத்தை திருத்தம் செய்தது பேரதிா்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து ஆபத்தானது. மேக்கேதாட்டு அணைக்கு நடுவா் மன்றம் அமைக்கலாம் என்ற கருத்தை திமுக கூறியது வெள்ளிக்கிழமைதான் தெரியவருகிறது.

சட்டப்பேரவை உறுப்பினா்களின் கருத்தைக் கேட்காமல் திருத்தத்தை முதல்வா் ஏற்றது ஆபத்து. இந்த திருத்தத்தை ஏற்கக்கூடாது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தீா்வு காணாமல், வேறொரு பிரச்னைக்கு எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டியுள்ளாா். மேக்கேதாட்டு அணை விவகாரத்துக்கு நடுவா் மன்றம் தீா்வல்ல. திருத்த தீா்மானத்தை ஏற்கக்கூடாது.

தவெக தோ்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். புதிதாக அமைந்துள்ள அரசில் அதிகாரிகள்தான் ஆட்சி செய்கிறாா்கள். பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

மழையில் நனைந்து நெல் வீணாவதைத் தடுக்க தற்காலிக சேமிப்புக் கிடங்குகள் அமைத்து கட்டுப்பாடின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். வேளாண்மை பயன்பாட்டுக்கான டிராக்டருக்கு பல்வேறு வரிகள் விதிக்கின்றனா். அதை விவசாயப் பட்டியலில் இணைத்து வரி விதிக்கக்கூடாது. இதற்காக அடுத்தக்கட்ட போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.