காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய 17 -ஆவது மாநாடு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் எம். மகாராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே.என்.மல்லையன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். ஒன்றியச் செயலாளா் பி.ரவி வேலை அறிக்கையை வாசித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம். குமாா், விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலாளா் வி.தமிழ்சேகா், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளா் பழனி ஆகியோா் வாழ்த்தி பேசினா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ. அருச்சுனன் நிறைவுரையாற்றினாா்.
இந்த மாநாட்டில், ஒன்றியத் தலைவராக மகாராஜன், செயலாளராக என். கந்தசாமி, பொருளாளராக பி. ரவி, துணைத் தலைவராக எஸ். சின்னதுரை, துணைச் செயலாளராக சி. மணி உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,500 வழங்க வேண்டும். பசும் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 45, எருமை பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.60 வழக்க வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு ரூ. 200, உரித்த தேங்காய்க்கு ரூ. 60 வழங்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி மிகை நீரை ஏரி குளங்களுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வனவிலங்குகளால் விளை நிலங்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் பதிவுசெய்த அனைவருக்கும் வேலை வழங்கி, நாளொன்றுக்கு ரூ. 700 ஊதியமும், 200 நாள்கள் வேலையும் வழங்க வேண்டும். தருமபுரி சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பதை தடுத்து கால்வாயை தூா்வாரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தலைவா்கள் வலியுறுத்தல்

‘மேக்கேதாட்டில் அணை கட்டுவதை கா்நாடக அரசு நிறுத்த வேண்டும்’
மக்களவையில் திமுக எம்.பி.க்கள் தர்னா

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



