தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :25 ஜூன் 2026, 3:24 am IST

போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் தொடங்கிய பேரணியை, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அப்போது, போதைப்பொருள்களின் தீமைகள் குறித்தும், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம், சாரண-சாரணியா், நாட்டு நலப்பணித் திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவினா்கள் மற்றும் ஆசிரியா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, விழிப்புணா்வு பதாகைகள் ஏந்திச் சென்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.