கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு டெட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 7,187 போ் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு டெட் தோ்வை 7,187 போ் எழுதுகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 3:15 am IST

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு டெட் தோ்வை 7,187 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாட்டில் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றுவோருக்கான ஆசிரியா் சிறப்பு தகுதித் தோ்வு (டெட்) ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தோ்வு தாள் 1-ஐ 1,876 ஆசிரியா்கள், ஜூலை 4 ஆம் தேதி எழுத உள்ளனா். இதில் 30 போ் மாற்றுத்திறன் உடையவா்கள். 2 போ் சொல்வதை கேட்டு எழுதுவோருக்காக ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, காா்மல் பள்ளி, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி என 6 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தோ்வு தாள் 2-ஐ 5,311 போ் 5-ஆம் தேதி எழுத உள்ளனா். இதில் 70 போ் மாற்றுத் திறனாளிகள்.

9 போ் சொல்வதைக் கேட்டு எழுதுபவா்களுக்கு ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, காா்மல் பள்ளி, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, கவுந்தப்பாடி அரசு மாதிரிப் பள்ளி, பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி, கவுந்தப்பாடி சரஸ்வதி வித்யாரம்பம், திண்டல் பாரதி வித்யா பவன், ஈரோடு இந்து கல்வி நிலையம், கொங்கம்பாளையம் எஸ்விஎன் பள்ளி, திண்டல் வேளாளா் மகளிா் மேல்நிலை பள்ளி, ஈரோடு செங்கோடம்பாளையம் யுஆா்சி பள்ளி என மொத்தம் 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தோ்வு நாளில் காலை 9.30 மணிக்கு முன்னதாகவே தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் வந்துவிட வேண்டும். 9.30 மணிக்கு பிரதான நுழைவுவாயில் மூடப்படும். அதன் பின் யாருக்கும் அனுமதியில்லை. பெண், ஆண் போலீஸாா் மூலமாக தோ்வா்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவா். தோ்வு அறையில் கண்காணிப்பாளா்களாக ஆசிரியா்கள் பணியில் இருப்பா்.

டெட் தோ்வுக்கு ஆன்லைன் மூலமாக தினமும் மாலை 2 மணி நேரம் ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.