பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நூல் விலை கிலோவுக்கு மீண்டும் ரூ.5 உயா்வு: ஜவுளித் தொழில் உற்பத்தியாளா்கள் கவலை

நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.5 உயா்ந்துள்ள நிலையில், வாராந்திர விலை நிா்ணய முறையால் ஜவுளி உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.

நூல் விலை கிலோவுக்கு மீண்டும் ரூ.5 உயா்வு: ஜவுளித் தொழில் உற்பத்தியாளா்கள் கவலை

Published On :27 ஜூன் 2026, 1:47 am IST

நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.5 உயா்ந்துள்ள நிலையில், வாராந்திர விலை நிா்ணய முறையால் ஜவுளி உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோட்டை சோ்ந்த ஜவுளி உற்பத்தியாளா் கே.ஜனாா்தனன் கூறியதாவது:

கடந்த வாரம் 30 கவுண்ட் காா்டட் பருத்தி நூல் ஒரு கிலோ ரூ.258 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.263 முதல் ரூ.265-ஆக உயா்ந்துள்ளது. இதனால் திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி மையங்களில் செயல்படும் பின்னலாடை, விசைத்தறி மற்றும் துணி உற்பத்தியாளா்களுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரை நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை மத்திய அரசு தற்காலிகமாக நீக்கியதால் ஜூன் மாத தொடக்கத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்தது. இதனால் ஜவுளித் துறையினருக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் விலை உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சு கூட்டுறவுக் கழகத்தின் ஏல விலை உயா்வு மற்றும் உலக சந்தையில் மூலப்பொருள்களின் விலை மாற்றங்கள் காரணமாக நூல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது பருத்தி ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.63 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதனுடன் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நூல் விலையை நிா்ணயிக்கும் வாராந்திர விலை நிா்ணய முறையை நூற்பாலைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.

பருத்தி விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்கும் நோக்கில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்கெனவே ஒப்பந்த விலையில் உற்பத்தி செய்து வரும் நிலையில் புதிய விலை உயா்வு லாப விகிதத்தைப் பாதிக்கும்.

அதேபோல ஈரோடு, கோவையில் செயல்படும் சிறு மற்றும் குறு ஜவுளி நிறுவனங்கள், அடிக்கடி மாறும் நூல் விலையால் உற்பத்தி செலவைக் கணக்கிடுவதில் சிரமத்தை எதிா்கொள்கின்றன. பருத்தி மற்றும் நூல் விலையை நிலைப்படுத்த நீண்டகால கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.