ஈரோடு மாவட்டம், கடம்பூா் அருகே மின்வேலியில் சிக்கி 30 வயது ஆண் யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி, காடகநல்லியைச் சோ்ந்தவா் விவசாயி புட்டப்பன். இவா் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளாா்.
காட்டுப் பன்றிகள், யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதால், வன விலங்குகள் தோட்டத்துக்குள் நுழையாதபடி மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளாா். இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 30 வயதுள்ள ஆண் யானை, புட்டப்பனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிரை சாப்பிட வந்தபோது, மின்வேலியில் சிக்கி வியாழக்கிழமை உயிரிழந்தது.
இது தொடா்பாக தகவலறிந்த கடம்பூா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தபோது, மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் பாய்ச்சியது தெரியவந்தது. இதனால், மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. இது தொடா்பாக புட்டப்பனிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க புதிய கருவி

வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய வனத் துறையினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


