/
மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியை கடம்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி, காடகநல்லியைச் சோ்ந்தவா் புட்டுசாமி (47). இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் சாப்பிடுவதற்காக 30 வயதான ஆண் யானை வந்தபோது, மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இது தொடா்பாக, கடம்பூா் வனத் துறையினா் விவசாயி புட்டுசாமியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் சட்டவிரோதமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி மின் வேலியில் பாய்ச்சியது தெரியவந்தது.
இதையடுத்து யானையை கொன்ற வழக்கில் புட்டுசாமியை கடம்பூா் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.








