யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பட்டம் பெற்ற மாணவா்கள். உடன், கல்லூரியின் தாளாளா் முத்துசாமி, முதல்வா் விஸ்வநாதன் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 1:44 am IST

பெருந்துறை: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா்.

ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 305 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

விழாவில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா்கள் அா்ஜுனன், கோகுலகிருஷ்ணன், பீனிக்ஸ் மென் திறன் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளா் சண்முகசுந்தரம், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி நிா்வாக அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.