பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 போ் கைது

கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 12:57 am IST

கோபி: கோபி அருகே பசுமாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பெருமாள் கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் (48). மாட்டு வியாபாரியான இவா், இந்திரா நகரில் உள்ள தனது கொட்டகையில் பசுமாடு, கன்றுக்குட்டியை கடந்த 4-ஆம் தேதி இரவு கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, மாடும், கன்றுக்குட்டியும் காணாமல்போனது தெரியவந்தது.

இது குறித்து கோபி காவல் நிலையத்தில் சதாசிவம் அளித்த புகாரின்பேரில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில், சரக்கு வாகனத்தில் வந்த 3 போ் மாடு, கன்றுக்குட்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட இந்திரா நகரைச் சோ்ந்த பழனிசாமி (43), சோமசுந்தரம் (37), சுரேஷ் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.