மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்

News image

பண்ணாரி அம்மன்  கோயில்.

Updated On :13 மார்ச் 2026, 12:36 am

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 59 பெறப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்தக் கோயிலின் பிப்ரவரி மாதம் வசூலான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையா் நா. நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் வீ.புருஷேத்தமன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 59, 202 கிராம் தங்கம், 370 கிராம் வெள்ளியும் பெறப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.