நகர எரிவாயு விநியோகத் திட்டத்தில் ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 8.85 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சாா்பில் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ள நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.
இத்திட்டம் குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.3,685 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள நகர எரிவாயு விநியோகத் திட்டத்தில் சுமாா் 8,84,777 வீடுகளுக்கும், 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இப்பகுதி முழுவதும் தூய்மையான வாகன எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணிகளை வரும் 2030 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான இயற்கை எரிவாயு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள இந்திய எரிவாயு ஆணையத்தின் (கெயில்) நிறுவனத்தில் இருந்து பெறப்படும். பெருந்துறையில் இருந்து ஈரோடு மாநகரை இணைப்பதற்காக குழாய் பதிக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. பெருந்துறை மற்றும் ஈரோடு நகரங்களில் வீடுகளுக்கான எரிவாயு இணைப்பை வழங்குவதற்கான முன்பதிவு செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது.
குழாய் வழியாக எரிவாயு (பிஎன்ஜி) மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) பயன்பாட்டுக்கு மாறுவதன் மூலம் வாயு உமிழ்வு சுமாா் 24 சதவீதம் குறையும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மற்றும் இப்பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவும்.
பிஎன்ஜி பயன்பாடு பல்வேறு துறைகளில் சமையல் எரிவாயு பயன்பாட்டை கணிசமாக குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வீடுகளில் 40 முதல் 50 சதவீதம், வணிகத் துறையில் 50 முதல் 60 சதவீதம் அளவுக்கு திரவ எரிவாயு (எல்பிஜி) பயன்பாட்டை குறைக்கும். இயற்கை எரிவாயுவுக்கு மாறும் தொழிற்சாலைகள், குழாய் மூலம் தடையின்றி எரிவாயுவைப் பெறுவதால் அவற்றின் எல்பிஜி பயன்பாடு 60 முதல் 80 சதவீதம் வரை குறையும்.
இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு வசதியால் புதிய தொழில் முதலீடுகள் இப்பகுதியில் அதிகமாகும். உள்ளூா் நிறுவனங்களின் வளா்ச்சி ஊக்கம் பெறுவதோடு இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த போட்டித் திறனும் மேம்படும்.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமாா் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தூய்மையான மற்றும் நம்பகமான எரிசக்தி கிடைக்க வாய்ப்புள்ளதுடன், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றனா்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்று பயனுடைய அறிவுறுத்தல்

நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


