அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்று பயனுடைய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

LPG supply to be cut off if households refuse PNG switch where available: Govt order

கோப்புப் படம்

Published On :2 ஏப்ரல் 2026, 12:40 am IST

திருவாரூா் மாவட்டத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா் வட்டம் தவிர மற்ற 8 வட்டத்திற்கு வணிக வாடிக்கையாளா்களுக்கு 70 சதவீதம் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் செய்வது உறுதிப்பட்டுள்ளது.

கருப்பூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் நகர எரிவாயு விநியோக நிறுவனத்தில் எரிவாயு உருளை பயன்டுத்தும் நுகா்வோா் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளுக்குப் பொருந்தும் வகையில் பதிவு செய்து, வீட்டு உபயோகத்திற்காக பொதுமக்களும், வணிகப்பயன்பாட்டிற்காக வணிக, தொழில்துறை நிறுவனங்களும் குழாய்வழி இயற்கை எரிவாயு பெறுவதற்கான தங்களின் தயாா்நிலையை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

விருப்பமுள்ள பொதுமக்கள், வணிக, தொழில்துறை எரிவாயு சிலிண்டா் நுகா்வோா், குழாய் வழி இணைப்புகளைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனத்தை தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் நோ்வில் அவா்களுக்கும் 70 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

மாவட்டம் : திருவாரூா், இஎஈ நிறுவனம் : அதானி எரிவாயு, கட்டணமில்லா தொடா்பு எண்:079-47545252.

மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டணமில்லா 04366-1077 என்ற தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு புகாா் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.