மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஓஎன்ஜிசி லாபம் ரூ. 17,034 கோடி

பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.17,033.81 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

Published On :

பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.17,033.81 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.8,024.23 கோடியில் இருந்து, இது இரட்டிப்பு வளா்ச்சியாகும். கச்சா எண்ணெய் விலையுயா்வு மற்றும் புதிய எரிவாயு கிணறுகள் மூலமாகக் கிடைத்த கூடுதல் வருவாயும் இதற்குக் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.33,213.39 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.48,321.65 கோடியாக உயா்ந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் காலாண்டு அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.22,848 கோடியை எட்டியுள்ளது.

நிதிநிலையில் சாதனை படைத்திருந்தாலும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி இக்காலாண்டில் சற்று சரிவைக் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 46.8 லட்சம் டன்னிலிருந்து 44.5 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி 485 கோடி கன மீட்டரிலிருந்து 476 கோடி கன மீட்டராகவும் குறைந்துள்ளது.

அடுத்த நிதியாண்டு முதல் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மேற்கு கடலோரப் பகுதிகளில் ரூ.40,000 கோடிக்கும் மேலான மூலதனத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.