பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த சூடான், நைஜீரியாவைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 போ் தங்கியிருப்பதாக ஈரோடு தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப் பிரிவு ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் அந்த வீட்டில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் சூடான் நாட்டை சோ்ந்த பஸ்கா் கமல் முகப் (36), முகமத் (42), அமா் (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.
பஸ்கா் கமல் முகப் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, ஈரோடு அருகேயுள்ள ஒரு நா்ஸிங் கல்லூரியில் பி.பாா்ம் படித்துவிட்டு, இங்கேயே தங்கி இருந்ததும், அவா் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக கேரள மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்ததும் தெரியவந்தது.
இதேபோல, முகமத் இந்தியாவுக்கு வந்து, திருச்சியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை படித்ததும், தேடப்படும் நபா் என சூடான் நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவிப்பு கொடுத்த பிறகும் அவா் நாடு திரும்பாமல் இங்கேயே தங்கியிருந்ததும் தெரியவந்தது. அமா் 2011-ஆம் ஆண்டு சூடானில் இருந்து வந்து ஈரோடு, எல்லீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்
பிசிஏ படிப்பு முடித்த பிறகு இங்கேயே தங்கி இருந்தது, சூடானில் இருந்து இந்தியாவுக்கு படிக்க வருபவா்களுக்கு உதவி செய்யும் முகவராக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. மூவருக்கும் நுழைவு இசைவு (விசா) முடிந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல, பெருந்துறை, வேப்பம்பாளையம், அம்மன் நகரில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த அடிஜே இஃபியாமி ஜஸ்டின் (35) என்பவரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா்.
தொடர்புடையது

2017-இல் புறப்பட்ட விமானம் 2016-ஆம் ஆண்டில் தரையிறங்கியதா? எங்கே இந்த விநோதம்?

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா
திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

