தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு

அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு

News image
வழக்குப் பதிவு- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 8:09 pm

Syndication

அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அந்தியூா் தோ் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி தலைமையில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதால், இதுகுறித்து அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி, அந்தியூா் வேட்பாளா் ஆலங்காட்டூா் ஆனந்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.