தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

இருசக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 3:48 am IST

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்தவா் அா்த்தனாரி மகன் அரவிந்த் (23). அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மாரியப்பன் (25). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது முன்னால் சென்ற காா் மீது மோதி இருவரும் சாலையில் விழுந்தனா்.

இதில் வலதுபுறம் விழுந்த மாரியப்பன், எதிரே வந்த டிப்பா் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இடதுபுறம் விழுந்த அரவிந்த் காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.